தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை

Weather Update

கடந்த சில நாட்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது. குறிப்பாக வியாழன் ஆண்ட்ரூ மாநிலத்தின் அநேக மாவட்டங்களில் மழை பதிவானது. இதன் காரணமாக பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட நெல் மழையில் நனைந்து பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் பதிவு செய்து இருந்தன.

கோடை மழையின் ஓர் அம்சம் சில சமயங்களில் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவும் சில சமயங்களில் ஆலங்கட்டியுடன் பெய்யக்கூடியதாகும். வளிமண்டலத்தில் உருவாகும் காற்றின் சலனம் காரணமாகவே பெரும்பாலும் கோடை மழை பெய்கிறது சில நேரம் சலனம் ஏற்படுத்தும் காரணிகள் ஒரே சமயத்தில் ஏதுவாக இருக்கும் போது இத்தகைய பெரு மழை ஏற்படுகிறது. தற்போது இருக்கும் வானிலை படிவங்கள் இத்தகைய நிகழ்வுகளை கோடிட்டு காட்ட முடியுமே தவிர துல்லியமாக இந்த இடத்தில் பெருமழை சலனம் காரணமாக ஏற்படும் என ஒவ்வொரு முறையும் கூற முடியாது.

வரும் சில நாட்களில் வானிலை படிவங்கள் தமிழகத்தில் பரவலாக வறண்ட வானிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவே காட்டுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மாத்திரமே வரும் வாரத்தில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. இங்கும் அடுத்த ஓரிரு நாடகளுக்கு பெரிய மழை எதுவும் நாம் எதிர்பார்க்க முடியாது.

இந்த கோடை மழை பரவலாக காற்றின் திசையில் ஏற்படும் தாற்காலிக மாற்றங்களின் காரணமாகவே ஏற்படுவது வழக்கம். கிழக்கத்திய காற்று அல்லது மேற்கத்திய காற்று சற்று பலமா இருக்கும் நிலையில் பரவலாக வறண்ட வானிலையயே நீடிக்க வாய்ப்பு.