வட அரைக்கோளத்தில் கோடைக்காலம் துவங்க அதிக தூரம் இல்லாத நிலையில் தமிழகத்தில் வெப்ப நிலை உயர துவங்கி உள்ளது. கடந்த சில நாட்கள் கரூர் போன்ற உட்புற பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சற்று குறைவாக பதிவாகியது. நேற்று திருவனந்தபுரம் இந்திய வானிலை மையத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது வரை இந்த மையத்தில் அதிகம் பதிவான வெப்ப நிலை இதுவே ஆகும். இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்கள் கீழை காற்று சற்று பலமாக…