கடந்த ஓரிரு நாட்களாக கேரளா மற்றும் தென் கர்நாடக பகுதிகளில் காற்றின் சலனம் காரணமாக இடி மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று சாரல் மழை பெய்தது. மேற்கு கரையோர பகுதிகளில் காற்றின் திசை கிழக்கில் இருந்து மேற்காக மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இது படிப்படியாக உட்புற பகுதிகளிலும் மாற துவங்கி விடும். இந்த சூழலில் காற்றில் ஏற்படும் சலனம் காரணமாக இடி மழை…
Category: Tamil Update
புதுவை / விழுப்புரத்தில் மாறி வருகிறதா வடகிழக்கு பருவமழை ???
வடகடலோர தமிழ்கத்தில் பருவ மழை – ஓர் நீண்ட கால ஆய்வு.
வடகிழக்கு பருவ மழை அதிகரித்துள்ளதா??
புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் ஓர் வானிலை பதிவு
நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவு – மார்ச் 2020
கடந்த மாதம் முதல் முறையாக வேளாண் மக்களுக்கு உதவும் நோக்கில் நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவை செய்திருந்தோம். ஜனவரி 21ஆம் தேதி அன்று பிப்ரவரி மாதம் ஏற்படக்கூடிய மழை நிகழ்வுகளை ஒரே ஒரு வரைபடமாக கொடுத்தோம். இது சற்று குழப்பமாக உள்ளதாகவும் மழையின் அளவு பற்றி எந்த குறிப்பும் இல்லை என்ற பரிந்துரை நமது வாசகர்களிடம் இருந்து வந்தது. இந்த முறை மார்ச் மாததிற்கான மழை எதிர்பார்புகளை ஐந்து வாரங்களாக பிரித்து பெய்யக்கூடிய மழை அளவை…
நீண்ட கால மழை எதிர்பார்பு பதிவு – ஜனவரி 21, 2020
நமது வலைபதிவில் பல முறை நாம் கூறும் ஓர் கருத்து “இந்தியா போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் வானிலை மிகவும் மாறுதலுக்கு உட்பட்டது. இதன் காரணமாக நீண்ட கால வானிலை கணிப்புகளின் துல்லியமும் மாறுதலுக்கு உட்பட்டது. இதனாலயே நமது வலைபதிவில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உட்பட்ட கணிப்புகளை கொடுத்து வருகிறோம். எனினும் வேளாண் மக்களுக்கு நீண்ட கால வானிலை எதிர்பார்பு மிகவும் அவசியம் உழவு, நடவு, அறுவடை, தானிய சேமிப்பு இவை அனைத்திலும் காலம் தவறி…
வெப்ப சலன மழைக்கு ஏதுவாக மாறும் வானிலை
கடந்த ஓரிரு வாரங்களாக பலரது கேள்வி “கோடை மழை எப்போது துவங்கும்?” விவசாய பெருங்குடி மக்கள் மாத்திரம் அல்லாமல் சாமானியர்களும் மழையை ஏங்கி தவிக்கும் நிலையில் தற்போது வெப்ப சலன மழை உருவாக ஏதுவான நிலைக்கு வானிலை தயார் ஆகி வருவது மகிழ்வு அளிக்கும் செய்தி. நாம் பல முறை கூறியது போல் சூரியனின் நேர் கதிர்கள் பூமியின் இரு அரை கோலங்களின் இடையே நகரும் நிகழ்வே பருவ மழைக்கான முக்கிய காரணி. சூரியனின் கதிர்களை ஓரிரு…